என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய கம்யூனிஸ்டு"
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று 2-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. குழு தலைவர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.
20 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி., நிருபர்களை சந்தித்தார்.
40 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பதை தமிழ்நாட்டின் கிராமப்புற நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு 2-வது கட்டமாக நாங்கள் வந்தோம். பேச்சுவார்த்தை மிகமிக சுமூகமாக நடைபெற்றது. நல்ல முறையில் திருப்தி அளிக்கிற வகையில் பேச்சு வார்த்தை நடந்தது.
நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருகிற 3-ந் தேதி வர உள்ளேம். அப்போது தொகுதி உடன் பாடு ஏற்பட்டுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்கனவே திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள் தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதலாக ஒரு தொகுதி கேட்பதால் இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வில்லை.
- ஏழையின் பணம் சுரண்டப்படுதல் குறித்த விளக்க நாடகம் செய்து காண்பித்தனர்.
- மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
சென்னை:
விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட சென்னை மாவட்டம் சார்பில் பாரிமுனையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசின் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பாடையில் கியாஸ் சிலிண்டரை சுமந்து வருவது போன்றும், ஏழையின் பணம் சுரண்டப்படுதல் குறித்த விளக்க நாடகம் செய்து காண்பித்தனர்.
இதில் 200-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
மத்திய ஆட்சிப்பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்க முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வருகிறது. தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருகிறது.
இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல கோடி மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வேலையில்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அந்தியூர் தாலுகா செய லாளர் தேவராஜ், பர்கூர் வட்டார குழு செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளி. அவரது வீட்டிற்கு புகுந்து அவரது உறவினர்கள் செல்வத்தை தாக்கி அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
அதை தடுத்த அவரது மனைவி மாதேவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
சிவகிரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டி யனை தாக்கிய வர்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிவகிரி பேருந்து நிலையம் காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவர் குருவு, மாவட்டக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாய தொழிலாளர் வட்ட தலைவர் வேல்சாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளனும், மாவட்ட துணைச் செயலாளர் சண்முக வடிவு மற்றும் வார்டு செயலாளர்கள் கோவிந்தன், கிருஷ்ணன், மாரியப்பன், ஏ.ஐ.ஒய்.எப். நகர செயலாளர் பால்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்.
- எந்த வாக்குறுதியையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.
திருப்பூர் :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது தமிழ்நாடு மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் 3 -வது நாளன்று நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு:- வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய இன்று ஆகஸ்ட் 9 ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரையில் வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் தேசியக் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட வேண்டும்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம்.
கருப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழிப்போம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை உயா்த்திக் காட்டுவோம் என்ற எந்த வாக்குறுதியையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. இதற்கு நோ்மாறாக பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உலகமே பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவைக் காப்பாற்றிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும், பொதுத் துறை நிறுவனங்களையும் மத்திய அரசு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.
எதிா்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி, வணிகமயமாக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைமையிலான மதசாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலிலும் மகத்தான வெற்றி பெற்றது. அதேபோல தமிழகத்தில் 2024 ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் இறுதி நாளான இன்று 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணி அளவில் திருப்பூா் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கும் செம்படைப் பேரணியானது காங்கயம் சாலையில் உள்ள பத்மினி காா்டனில் நிறைவடைகிறது.
- குமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில்:-
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார்.மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் மாநில நிர்வாக குழு விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி னார்கள்.
மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், மாநகர பொருளாளர் நாகராஜன், மாநகர செயலாளர் இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீகுமார், அருணாச்சலம், அணில் குமார், தாமரை சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்கவும் சட்டக்கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திருப்பூர் தொகுதியில் 15,29,836 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 11,15,610 வாக்குகள் பதிவானது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் போட்டியிட்டார். அவர் 5,08,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43 ஆயிரத்து 816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதன் 42 ஆயிரத்து 189 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் 64 ஆயிரத்து 657 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜீஸ்பாஷா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பா.ஜனதா ஆட்சியின் 4 ஆண்டுகாலத்தில் நாட்டின் பொருளாதாரம் 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிபாளையத்தில் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வருகிற ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்திக்கும். இதை கருத்தில் கொண்டே பாராளுமன்றத்துடன் மாநிலங்களுக்கு நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமரானால் அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் ஆகியோர் உடனிருந்தனர். #pmmodi #indiacommunist
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்